ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அந்த 100 நிமிடங்கள்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தங்கள் மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல், ஏர்டெல் போன்ற தொலைதொர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தனர்.
அதேபோல தற்போது ஜியோ போன் வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு 100 வினாடிகள் இலவசம், மற்றும் 100 எஸ்.எம்.எஸ்-களும் இலவசம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 17ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025