ஜியோவா?ஏர்டெல்லா? எந்த ஆபார் சிறந்தது?ஆபாருடன் களமிறங்கியது ஜியோ……

Default Image
ஜியோ வந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது வரை அதன் மவுசு குறையவில்லை .குறிப்பாக மற்ற நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.சமீபத்தில் தான் ஏர்டெல் சலுகைகளை அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக ஜியோவும் தனது சலுகையை அறிவித்துள்ளது .
Related image
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடும் போட்டியில் இறங்கியுள்ள மொபைல் போன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய இலவச வாய்ப்புகளுக்கு மற்ற நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா ஈடுகொடுக்க முடியாமல் திணறின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களும் கட்டணத்தை பெருமளவு குறைத்ததுடன், பல்வேறு சலுகைகளையும் அளித்தன.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, 28 நாட்களுக்கு ரூ. 149, 70 நாட்களுக்கு ரூ. 349, 84 நாட்களுக்கு ரூ. 399, 91 நாட்களுக்கு ரூ. 449 திட்டத்தின் கீழ் தற்போது ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.  இது, 1.5 ஜிபி டேட்டவாக அதிகரிக்கப்படுகிறது.
Image result for JIO VS AIRTEL
அதுபோலேவே, , 28 நாட்களுக்கு ரூ. 198, 70 நாட்களுக்கு ரூ. 398, 84 நாட்களுக்கு ரூ. 348, 91 நாட்களுக்கு ரூ. 498 திட்டத்தின் கீழ் தற்பாது ஒரு வழங்கப்படுகிறது. 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதில், 2ஜி டேட்டா இனி வழங்கப்படும்.
குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி முதல் புதிய சலுகை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மற்ற திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்