விறுவிறுப்பாக தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!
- ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று வருகிறது.
- முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
- இன்று நடைபெறும் 20 தொகுதிகளுக்கான வாக்குபதிவில் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளில் தொண்டன்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணி வரையிலும், மற்ற தொகுதிகளில் மலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி அனைத்து தொகுதிகளின் ரிசல்ட் அறிவிக்கப்படும்.
இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் தொல்லை அதிகம் இருப்பதால் சுமார் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.