ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு சம்பவம் தொடர்பான தகவல் அனுப்பப்பட்டது.
மீட்பு துறையினர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்ததையடுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கட்டிடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருப்பதால் கட்டிடத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்க முடியவில்லை என்று மாவட்ட டிஎஸ்பி தெரிவித்தார்.
தீ விபத்தில் மீட்கப்பட்ட 18 பேரை அதிகாரிகள் அருகிலுள்ள பாட்லிபுத்ரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மீட்புப் பணியை மேலும் தீவிரமாக்க அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதே நேரத்தில் தீ விபத்தில் சிக்கிய கட்டிடத்தில் கூட்டமாக திரண்டு வந்த உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…