என் கணவரை தாக்கி…7 பேர்..,ஸ்பானிஷ் பெண்ணின் பதைபதைக்க வைத்த வாக்குமூலம்.!
Gang Rape Case – ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வங்கதேசம், நேபாளம் என சுற்றி பின்னர் இந்தியா வந்துள்ளனர். இந்தியா சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதிக்கு மார்ச் 1ஆம் தேதி இரவு நேர்ந்த கொடூரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில், தும்கா எனுமிடத்திற்கு வந்த சமயம் அருகில் ஹோட்டல் எதுவும் இல்லாத காரணத்தால், சாலையோரம் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி
அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை தாக்கி, அந்த ஸ்பானிஷ் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தடுக்க முயற்சித்த கணவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தி அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். பின்னர் அங்கு வந்த ரோந்து பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமையை உறுதி செய்தனர். அதன் பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் ஜார்கண்ட் மாநில காவல் துறையினர். பாதிக்கப்பட்ட தம்பதியினரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். தங்கள் பயணத்தை வீடியோ மூலம் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் அந்த தம்பதியினர், தங்களுக்கு இந்தியாவில் நேர்ந்த இந்த கொடூரத்தையும் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்
READ MORE – நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு
அதில் பேசிய தம்பதி, அவர்கள் தன்னை சுமார் 2 மணிநேரம் பாலியல் பலாத்காரம் செய்தார்கள், சிலர் பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தார்கள். அவர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என பயந்தோம் என வருத்தத்துடன் கூறினார். அப்போது தம்பதியினர் முகத்தில் பல்வேறு காயங்கள் இருந்தன. (பெண்ணின் நலன் கருதி வீடியோவை நமது தளத்தில் பதிவிடவில்லை).
READ MORE – பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு.! என்ஐஏ வசம் ஒப்படைப்பு.!
தம்பதி வீடியோ வெளியிட்ட பின்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், சம்பவம் நடந்த பகுதிக்கு டெல்லியில் உள்ள தங்கள் ஊழியர்களை அனுப்புவதாகவும், இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியது, மேலும், பிரேசில் தம்பதியை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினர்.
தற்பொழுது, இந்த வழக்கு விசாரணையில் 7 பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். மற்ற நான்கு குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஜார்கண்ட் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்னர்.