கொரோனாவிற்கு ஜர்க்கண்ட் எம்எல்ஏ பலி…முதல்வர் இரங்கல்

Default Image

கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மந்திரி ஹாஜி ஹுசைன் அன்சாரி உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் குறையாமல் கூடிக்கொண்டே வரும் கொரோனாத்தொற்றால் உலகமே ஆடி போய் உள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனாவில் இருந்து அமைச்சர் மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

கொரோனாவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வந்த அமைச்சரின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஜார்கண்ட் மாநில முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த அன்சாரி மாநில ஹஜ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர்.ஜார்கண்ட் மாநில மதுபூர் தொகுதி எம்.எல்.ஏவான மறைந்த ஹாஜி ஹுசைன் அன்சாரி  4 முறை தொடர்ந்து அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் மறைவுக்கு, அம்மாநில முதலவர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி  இறந்த தகவல் அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். கட்சி வளர்ச்சிக்கும், மாநில நலனுக்காகவும் மிகவும் பாடுபட்டவர். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்