ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.!
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்ற சோரன் தரப்பு, மீண்டும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் தரப்பில் வாதிடுகையில், ஹேமந்த் சோரன் குற்றவாளி அல்ல என்றும், அவர் மீதான குற்றங்கள் உண்மையானது அல்ல என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் சோரன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.