ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதல்வர்.! சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்.!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அதாவது அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்..!
ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அமலக்கத்துறை விசாரணையின் பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சோரன் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். ஹேமந்த் சோரனும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், இந்த நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டோம் என்றவாறு பதிவிட்டு இருந்தார்.
ஹேமந்த் சோரனின் ராஜினாமாவை தொடர்ந்து அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்க , தங்கள் ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார்.
ஆனால் இது குறித்து ஆளுநர் தரப்பிலிருந்து எந்த பதிலும் நேற்று வரை வராமல் இருந்திருந்தது. இதனால் ஜார்கண்ட் மாநில அரசியல் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு ஆளுநர் ராதாகிருஷ்ணன் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவி ஏற்க உள்ளார். அவர் அடுத்த 10 நாட்களில் ஜார்கண்ட் மாநில சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும்