5 வருடத்திற்கு பிறகு மீண்டும் அரசு விடுமுறை அறிவித்த ஜார்கண்ட் அரசு .!
- சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
- பாஜக அரசு 2015-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை நீக்கியது.
சுதந்திர போராட்ட வீரரான மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று ஜனவரி 23-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு விடுமுறை விடப்பட்டு அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வருடா வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளன்று அம்மாநிலத்தில் அரசு விடுமுறை விடப்பட்டு வந்தது.
ஆனால் அம்மாநிலத்திற்கு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 2015-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை நீக்கியது.இந்நிலையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இதையெடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜனவரி 23-ம் தேதியை அதாவது இன்று அரசு விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.