ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பெண்கள் உட்பட 3 குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்ததையடுத்து, “தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்” என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தன்பாத்தின் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பிற விபத்துகளில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ₹ 4 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…