ஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த வேட்பாளர்..!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாகநடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் மூன்று மணிவரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , மறுப்பக்கம் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா , மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிஅமைத்துள்ளனர். இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி46 .50 சதவீத வாக்குகள்பதிவாகி இருந்தது.
அப்போது பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி மற்றும் பாஜக வேட்பாளர் அலோக் ஆதரவாளர்களுக்கிடையில் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதியை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி கையில் துப்பாக்கியுடன் வாக்குப்பதிவு மையத்த்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பலாமு பகுதியில் தேர்தல் அதிகாரி கூறுகையில், கோஷியாரா வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையில் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் வாக்குசாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி ஆயுதங்களுடன் நுழைய முற்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்களைப் போலீசார் கைப்பற்றியதாக கூறினார்.