ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அவர் ஆஜரான நிலையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர், இதையடுத்து இன்று தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த நிலையில் அவரிடம் 7 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சற்று முன்னர் அவர் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…