அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு… ஜார்கண்ட் முதல்வர் கடும் குற்றசாட்டு.!

Jharkhand CM Hemant Soren

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன் மீது வேண்டுமென்றே அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது என முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் .

நில மோசடி வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டு இருந்தது. அந்த தேதியில் முதல்வர் சோரன் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராகவில்லை. மாறாக, அந்த சம்மனுக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசு மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

12க்கும் மேற்பட்ட நில மோசடிகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. 1932 ஆம் ஆண்டு வரையிலான போலி ஆவணங்களை உருவாக்குவதற்கு நில மாஃபியா, இடைத்தரகர்கள் மற்றும் மாநில அரசுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு நிலம் தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்