நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் கோரிக்கை!
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த வியாழக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது கொரோனா தொற்று கொண்ட ஒரு மாணவர் இந்த தேர்வில் கலந்துகொண்டால் மற்ற மாணவர்களுக்கும் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
மேலும் தேர்வு எழுதுபவர்களை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்கும் பொழுது அவர்கள் அவ்விடத்திலிருந்து வருவதற்கு பெரும் தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு இந்த இரண்டு தேர்வுகளையும் பொதுநலனுக்காக ஒத்தி வைப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.