45-இலிருந்து 41-ஆக குறைந்தது காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதி நிலவரம்!
- ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
- இதில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும், பாஜக 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.
இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 45 தொகுதிகளில் இருந்து 41 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 25 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.