தங்கப்பதக்கங்களை குவித்த வீராங்கனை காய்கறி விற்பனையாளராக மாறிய அவலம்.!
8 தங்க பதக்கங்களை வென்றுள்ள கீதா குமாரி சாலையோர கடைகளில் வேலைபார்த்த தகவல் அறிந்ததும், ஜார்கண்ட் மாநில முதல்வர் அவருக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியும், மாதந்தோறும், 3000 ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கீதா குமாரி என்ற விளையாட்டு வீராங்கனை மாநில அளவிலான நடைப்பயிற்சி போட்டிகளில் இதுவரை 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிகளில் வெள்ளி பதக்கங்களையும், வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இத்தகைய வீராங்கனை வறுமையின் காரணமாக காய்கறி கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளளர்.
சிறந்த வீராங்கனையாக உருவெடுக்க வேண்டிய கீதா குமாரி வறுமையின் காரணமாக சாலையோர காய்கறி கடையில் விற்பனையாளராக மாறியது குறித்து தகவல் தெரிந்ததும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடனடியாக அந்த வீராங்கனைக்கு அரசு சார்பில் உதவியுள்ளார்.
உடனடியாக அவர் வசிக்கும் ராம் நகர் பகுதியின் துணை ஆணையரை அழைத்து கீதா குமாரிக்கு அரசு சார்பில் உதவி செய்ய சொல்லி உள்ளார். அதன்படி, கீதா குமாரிக்கு மாவட்ட நிர்வாகம் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கியது. மேலும், மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 3,000 ரூபாயை வழங்குவதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அந்த வீராங்கனை விளையாட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க பயிற்சிக்கும் ஏற்பாடு செய்ததாக செய்துள்ளார். இதனை ராம் நகர் துணை ஆணையர் சந்தீப் சிங் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் குறிப்பிடுகையில் ராம்நகரில் இதுபோன்று திறமையான விளையாட்டு வீரர்கள் இன்னும் இருக்கின்றனர், அவர்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டுபிடித்து ஊக்குவிக்கும். எனவும் தெரிவித்துள்ளார்.