தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஜார்கண்டில் நிஜமாகிவருகின்றன!

Default Image
  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன. 
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இதே போல தான் முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. அதில் காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும்,  பாஜக 22 முதல் 32 தொகுதிகளிலும், ஜே.வி.எம் 2 முதல் 4 தொகுதிகளிலும் , மற்ற இதர காட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அதே போல தற்போது முடிவுகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்