ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் கை ஓங்குகிறது!
- ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது.
- இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடைசியாக நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்து இருந்தனர். முதல்வர் ரகுபர் தாஸ் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஜே.எம்.எம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டனர். பாஜக தனித்து தேர்தலை சந்தித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் நடைபெற்றது போல ஜார்கண்ட் தேர்தலிலும் நடைபெற்ற கூடாது என பாஜக முனைப்புடன் செயல்பட்டு வந்தது. மத்திய ஆட்சியை போல மாநில ஆட்சியினை பிடித்து செல்வாக்கு பெற பாஜக முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வரை தேர்தல் முடிவுகள் நிலவரத்தில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 45 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 8 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று, யார் ஜார்கண்ட் மாநில ஆட்சியினை கைப்பற்ற உள்ளனர் என இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.