JEE Main, NEET 2020 : உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

Default Image

உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்.

என்.டி.ஏ சமீபத்தில் ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 ஆகியவற்றை அட்டவணைப்படி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பல மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்பில் திருப்தி அடையவில்லை, மேலும் JEE Main மற்றும் NEET 2020 ஐ ஒத்திவைக்கக் கோரினர்.

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தை அனுசரித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் ‘மான் கி பாத்’ ஐ அரசு கேட்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவர்கள் #SATYAGRAHagainstExamInCovid ஐ ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யத் தொடங்கினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்