நீட், JEE Main தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என தகவல்.!
நீட் மற்றும் JEE Main தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நீட், JEE Main தேர்வுகள் மே இறுதியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தற்போது தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அதுவும் ஊரடங்கு முடிந்தே அதற்கான முடிவும், அட்டவணையும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி தள்ளிப்போவதால், வளாக நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை நிறுவனங்கள் ரத்து செய்யக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து CBSE பாடத்திட்டத்தின் சுமையைக் குறைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.