ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு.. 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம்..!
பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது. நடப்பாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஜனவரியில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் , கடந்த 1-ம் தேதி முதல் 6 தேதி வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதினர்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அதில், தெலுங்கானாவில் இருந்து எட்டு பேரும், டெல்லியைச் சேர்ந்த ஐந்து பேர், ராஜஸ்தானில் இருந்து நான்கு பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பேர், ஹரியானாவைச் சேர்ந்த இருவர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒருவர் என 24 பேர் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த மதிப்பெண் பட்டியல் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.