JEE முதன்மை 2022 அமர்வு 2 – அனுமதி அட்டை நாளை வெளியாகிறது !
JEE முதன்மை 2022 அமர்வு 2 தேர்வு ஜூலை 25 அன்று தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கான அட்மிட் கார்டுகள் நாளை (ஜூலை 21) jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படுகிறது .
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி JEE முதன்மை நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இம்முறை, நாடு முழுவதும் சுமார் 500 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 17 நகரங்களிலும் 629778 தேர்வர்கள் தேர்வெழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
JEE முதன்மை 2022 அமர்வு 2 தேர்வில், (BE/BTech) மற்றும் (BArch/BPlanning) ஆகிய இரண்டிருக்கும் விண்ணப்பதாரர்களும் தோன்றுவார்கள். JEE முதன்மை 2022 பகுதி ஒன்று தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் அமர்வு 2 முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.