JEE Main 4-ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றம் – மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

Default Image

ஜே.இ.இ மெயின் நான்காம் கட்ட தேர்வு தேதி மாற்றம் செய்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது.

இந்த தேர்வில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக நடைபெற இருந்தன. ஆனால், கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்படது.

இந்தாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என்றும் நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜே.இ.இ மெயின் நான்காம் கட்ட தேர்வு தேதி ஒத்திவைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதன்படி, JEE (முதன்மை) 2021 நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் 31 ஆம் தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளிலும் நடைபெறும். மொத்தம் 7.32 லட்சம் பேர் ஏற்கனவே JEE (முதன்மை) 2021 நான்காம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 

மேலும் ஜேஇஇ முதன்மை 2021 தேர்வின் மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டம் தேர்வுகளுக்கு நான்கு வார இடைவெளியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு ஜூலை 20 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்