ஜேஇஇ முதன்மை 2022 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது
கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை (JEE Main) 2022 அமர்வு 1 க்கான முடிவுகள் தேசிய தேர்வு நிவனத்தால்(NTA) இன்று காலை அறிவிக்கப்பட்டது.
ஜேஇஇ முதன்மை தேர்வு ஜூன் 23 முதல் 29, 2022 வரை 501நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அதன் விடைத்தாள் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண் முடிவுகளளை பின்வரும் இணையதளங்களில் nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in பார்க்கலாம்.
ஜேஇஇ முதன்மை அமர்வு 1க்கான தேர்வு முடிவுகளில் 14 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
ஜேஇஇ மெயின் இரண்டாம் அமர்வுக்கான தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெற உள்ளது.