JEE Main 2021 3ம் சீசன் முதன்மை தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணைதளம் சென்று முடிவு அறியலாம்.
ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான மூன்றாம் கட்ட (3rd session) ஜேஇஇ முதன்மைத் தோ்வு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 வெளிநாட்டு நகரங்கள் உள்பட மொத்தம் 334 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 915 மையங்களில் இந்தத் தோ்வு நடத்தப்பட்ட நிலையில், மொத்தம் 7.09 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.
ஜேஇஇ முதன்மைத் தோ்வு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், JEE Main 2021 மூன்றாம் சீசன் முதன்மை தேர்வுக்கான முடிவை தேசிய தோ்வுகள் முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது. இதனை jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
Ntaresults.nic.in இல் பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைச் அறியலாம். ஜேஇஇ முதன்மைத் தோ்வு 3வது சீசனில் 17 மாணவர்கள் 100 Percentile மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். JEE மெயின் 2021 அமர்வு மூன்று முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் தங்கள் முடிவுகளை மேம்படுத்த நான்காவது அமர்வில் எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் ஜேஇஇ முதன்மைத் தோ்வு மாணவா்களின் வசதிக்காக 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் இரண்டு கட்டத் தோ்வுகள், கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. 4-ஆம் கட்ட நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறும்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…