பல எதிர்ப்புக்கு மத்தியில் நாளை ஜேஇஇ தேர்வு தொடக்கம்.!
நாடு முழுவதும் நடைபெறவுள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர், தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி (அதாவது நாளை) தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில், தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 மாணவர்கள் தேர்வு எழுதஉள்ளனர்.