தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
ஒவ்வொரு வருடமும் தேசிய தேர்வு முகமை சார்பில் JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
அதன்படி, முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4 ஆம் தேதி வரையும், 2 ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போர்டு தேர்வுகள் மற்றும் JEE முதனமை தேர்வுகள் ஒன்றாக நடைபெற இருந்ததால், தேர்வர்கள் முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை JEE முதன்மை தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. இதனையடுத்து, முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2 ஆம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…