NITயில் சேருவதற்கான JEE தேர்வு முடிவுகள் வெளியாகியது… எங்கு எப்படி பார்க்கலாம்.?
இந்தியாவில் உள்ள NIT கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முக்கிய கல்வி மையங்களில் ஒன்றான NIT கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு தனியாக JEE எனப்படும் ஒன்றை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான கல்லூரிகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
அதன்படி, JEE தேர்வானது இரண்டு விதமாக நடத்தப்படும். முதல் பிரிவில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வும், இன்னோர் பிரிவில் ஆர்க்கிடெக்சர் படிப்புகளில் சேருவதற்கு நுழைவு தேர்வு நடத்தப்படும்.
இந்த JEE தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. JEE தேர்வு எழுதிய மாணவர்கள் jeemain.nta.nic.in இந்த தளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை குறிப்பிட்டு தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain nta.nic.in க்குச் செல்லவும்.
- மேற்கண்ட பக்கத்தில் பிரிவு 1 அல்லது பிரிவு 2 என தங்களுக்கு தேவையான இணைப்பை கிளிக் செய்யவும்.
- அதன்பின்னர், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
- இறுதியில் மதிப்பெண் திரையில் தோன்றும். தேவை இருப்பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
JEE தேர்வில் தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக கல்லூரியை தேர்ந்தெடுக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது அவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கப்படும்.