நாடு முழுவதும் JEE அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், நாடு முழுவதும் JEE அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அதனுடன், தேர்வெழுத 75% மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். ஜேஇஇ முதன்மை தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…