நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன.
இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியும் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்ள பிரதான கட்சிகள் டெல்லிக்கு விரைந்துள்ளன.
முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தான் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என திட்டவட்டமாக கூறிச்சென்றார். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளியில் கூறவில்லை. மேலும், இன்று இந்தியா கூட்டணியில் உள்ள RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி ANI சேத்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்து வரும் செய்திகள் வெறும் வதந்திகள். நாங்கள் பாஜக தலைமையிலான NDAவில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நாங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டோம். நிதிஷ் குமார் தற்போது டெல்லியில் இருக்கிறார். அதில் JD(U) தங்கள் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிப்பார். நரேந்திர மோடியை பிரதமராக முன்மொழிவார் என JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறினார்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…