Prajwal Revanna [File Image]
கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு சென்றதாக கூறப்பட்ட மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, தான் நிரபராதி என்றும் 31ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதாகவும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, ஹாசன் தொகுதி ம.ஜ.த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்கள் மற்றும் இன்னும் சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில், அவர் தனது எம்பி பதவிக்கான டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவின் சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் பிரஜ்வல் மீது புளு கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வதேச அளவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
இப்படியான சூழலில் தற்போது வீடியோ வெளியிட்டு தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், வரும் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாகவும் பிரஜ்வல் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். தான் முன்பே திட்டமிருந்தபடிதான் வெளிநாடு வந்துள்ளேன். தற்போது தான் என்மீதான பாலியல் குற்றசாட்டுகளை பார்க்கிறேன். என்மீது அரசியல் கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர். இத்தனை நாட்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்காமல் இருந்தததற்கு கட்சியினருக்கும், பொதுமக்களுக்களிடத்திலும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…