கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 24-ம் தேதி அன்று வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் , சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரம் ஜாஃப்ராபாத், சிவ் விஹார், சீலம்பூர், ஷாகுர் பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். 108 காவல்துறையினர் காயமடைந்தனர், இரண்டு பேர்உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திடம் செப்டம்பர் 2 ம் தேதி டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு விசாரித்தது.
இதைத்தொடர்ந்து, அவரிடம் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு நேற்று இரவு கைது செய்தது. டெல்லி போலீசார் காலித்தை சிறப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித்தை கைது செய்து உள்ளனர்.
இதுவரை 751 வழக்குகளில் 1,575 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளில் 250 க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…