#BREAKING: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது..!
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரம் நோக்கி செல்லும், ஜாவத் புயல் நாளை ஆந்திர கடலோரத்தை அடையும்போது மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 5-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே ஜாவத் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் உள்ள ஜாவத் புயல் நாளை மாலை தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.