ஜனவரி 26 வரலாற்றில் இன்று..! இந்திய குடியரசு முதல் குஜராத் நிலநடுக்கம் வரை…!

Default Image

இந்திய வரலாற்றில் ஜனவரி 26 அன்று நடந்த நிகழ்வுகளில் சிலவற்றை காண்போம்.

ஜனவரி 26, 1950 அன்று இந்திய நாடு குடியரசாக மாறியதைத் தொடர்ந்து 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜோதிக்கு வீரவணக்கம் செலுத்துவார். குடியரசு நாளான இன்று அணிவகுப்பு நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் நாட்டிற்காக சேவை செய்த படைவீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்.

இந்திய குடியரசு தினம் :

1930 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை முழக்கங்களை நினைவுகூறும் வகையில் ஜனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1935-ல் அமைக்கப்பட்ட இந்திய அரசு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளாகும். ஜனவரி 26, 1950 அன்று இந்திய நாடு குடியரசாக மாறியதைத் தொடர்ந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று. இந்தியா குடியரசு ஆனதை தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

Republic Day 1
[Image Source: DNA India]

இந்தி அதிகார பூர்வ மொழியானது : 

இதே நாளில் 1965-ல் இந்தி இந்தியாவின் அதிகார பூர்வ மொழியானது. ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு அங்கீகாரம் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று. பாலிவுட் (ஹிந்தித் திரைப்படத்துறை) என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ முக்கிய காரணமாக இன்றுவரை இருந்து வருகிறது.

Hindi
[Image Source : Getty Images]

குஜராத் நிலநடுக்கம் : 

இந்தியாவின் 52-வது குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், இந்தியாவின் மேற்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் சோபாரி கிராமத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் கட்ச் மாவட்டத்தில் 20,000-கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வால் குடியரசு தினம் சோகத்தில் முடிந்தது.

Gujarat Earth Quake
[Image Source : youturn]

ஆஸ்திரேலியா நாள் (Australia Day) : 

ஆஸ்திரேலியா நாள் என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரிட்டன் மக்கள் வந்த நாளை நினைவு கூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. 1788-இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஜாக்சன் துறைமுகத்தில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும். முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

australia day
[Image Source : tropicdays]

சி. டி. ராஜகாந்தம் இறந்த நாள் :

சி. டி. ராஜகாந்தம் தமிழ்நாட்டின் பிரபலமான நகைச்சுவை நடிகை ஆவார். ராஜகாந்தம் 1917 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் திரவியம் ஆசாரியார், மருதாயி அம்மாள் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை கோவையில் தோல் விற்பனை செய்யும் கடை  வைத்து வணிகம் செய்து வந்தார். ராஜகாந்தம் ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். ராஜகாந்தம் தானே ஒரு நகைச்சுவை நாடகக் குழுவை ஆரம்பித்து சில நாடகங்களில் நடித்து வந்தார். 1939 ஆம் ஆண்டில் வெளியான மாடர்ன் தியேட்டர்சின் மாணிக்கவாசகர் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ஏகம்பவாணன் திரைப்படத்தில் முதற்தடவையாக கே.சாரங்கபாணியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார்.

C.D.Rajakandam
Sabapati movie [Representative Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்