ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம்;பிரபல தெலுங்கு நடிகர் அறிவிப்பு

Default Image

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், அமராவதியில் ஜனசேனா நிறுவன நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கலந்துக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், ”மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்குதேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றிவிட்டது.மேலும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன், தன் தந்தை என பெயரை சொல்லி பெருமளவு ஊழல் செய்து வருகிறார். 2019ம் ஆண்டு, ஆந்திராவிற்கு நடக்க உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று அவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்