ஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

Default Image

மக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஜன.29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது. அண்மையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இம்மாதம் 29-ம் தேதி கூட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் மக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன.29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest