#Breaking : ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து-அமித்ஷா அறிவிப்பு
இந்திய அளவில் காஷ்மீர் தொடர்பான விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இன்று மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் கொறடா உத்தரவு விட்டார் . மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியது. இதனையடுத்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.காஷ்மீர் தொடர்பான மசோதாவை அறிமுகம் செய்து ,அதை தாக்கல் செய்தார் அமித் ஷா. இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யும் பொழுது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது.கடும் அமளியில் அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.