ஜம்மு & காஷ்மீர்: உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

Rajya Sabha

ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், யூனியன் பிரதேசத்தில் உள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்ற வகை செய்யும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மூன்று மசோதாக்கள் இன்று மாநிலங்களவை பரிசீலினையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை (திருத்தம்) மசோதா 2024 மற்றும் அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இதில், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 மாநிலங்களைவையிளும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்த நிலையில், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்த மசோதா ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1989, ஜம்மு காஷ்மீர் நகராட்சி சட்டம் 2000 மற்றும் ஜம்மு காஷ்மீர் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 2000 ஆகியவற்றில் திருத்தத்தை வழங்குகிறது. யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவதை இந்த சட்ட திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்