காஷ்மீரில் 407 நாட்கள் வீட்டுச்சிறையில் இருந்த நயீம் அக்தர் தான் விடுதலை….
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துமத்திய அரசு ரத்து செய்யப்பட்டு மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். மேலும், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்துவருகிறது. எனவே வீட்டுக்காவலில் இருந்த பலரும் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும், மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இன்னும் வீட்டுக்காவலிலேயே உள்ளனர். இந்நிலையில், தற்போது ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவரான மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான நயீம் அக்தர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கிட்டத்தட்ட 407 நாட்கள் வீடுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நயீம் அக்தர் தான் நேற்று விடுதலையானதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.