ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 4 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் உள்ள ஜன்ட்ரோட் என்ற இடத்தில் எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி நடவடிக்கையில் இறங்கினர். இந்திய ராணுவ வீரர்களின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.