ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து – இன்று முதல் விசாரணை!
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கை இன்று முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். இந்திய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு (Article370) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ல் மத்திய அரசு நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு மாநிலமாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 23 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான வழக்கை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.