Categories: இந்தியா

ஜம்மு-காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம்….!சட்டமன்றத்தை கலைத்தார் ஆளுநர்…!

Published by
Venu

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.

Image result for மெகபூபா முஃப்தி

இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.இம்ஹ்ம்ஹிலையில் திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் வெவ்வேறு துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

 

இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்து .இன்று ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.பின்  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி.

 

இந்நிலையில் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

6 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

31 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago