ஜம்மு காஷ்மீர் : காது கேளாத ஊமைப் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியை நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உதம்பூர் மாவட்டம் லடா பகுதியை சேர்ந்த நசீப் சிங் என்பவரின் மகன் கர்னைல் சிங் என்பவர் இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அபராதம் செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட வாய் பேசமுடியாத, காத்து கேளாத பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025