ஜம்மு காஷ்மீர் விவகாரம் – தேசிய மாநாட்டு கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 (1) ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், குடியரசு தலைவரின் ஆணையானது ஆளுநரின் ஒப்புதல் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதலையும் பெற்றிருக்கவேண்டும் .ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திடீரென அமல்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமானது ஜனநாயக உரிமையை பறிக்கும் விதத்தில் உள்ளது . எனவே, மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.