ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.
இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இதன் பின் .ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. ஆளுநர் ஆட்சி முடிவடைந்த பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.