ஜம்மு-காஷ்மீர்: நேற்று நள்ளிரவு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷிவ் கோரி எனும் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பேருந்து மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் அதில் அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 33 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து கத்துவாவில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (CRPF) சேர்ந்த ஒரு அதிகாரி உயிரிழந்தார் மேலும், அவருடன் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டார். இதனால் ஜம்மு மண்டலத்தின் இயக்குநர் ஜெனரல் ஆனந்த் ஜெயின், அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் மூன்றாவது தாக்குதல் சம்பவமாக, ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள தோடாவில் உள்ள சத்தர்கலா எனும் ராணுவ தளத்தில் அரங்கேறியுள்ளது. இந்த தாக்குதலில் போலீசார் மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கூட்டுப்படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளை நோக்கி, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில், 5 வீரர்கள் மற்றும் ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி (SPO) ஆகியோர் படுகாயமடைந்தனர். கத்துவா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மற்றொரு பயங்கரவாதியை கண்டறிந்து பிடிக்க, ஹிராநகர் பகுதியில் ட்ரோன் மூலம் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இதனால், கடந்த 3 நாள்களாக பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து அரேங்கேறுவதால் ரியாசி மற்றும் தோடாவில் பதற்றம் நிலவு வருகிறது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…