ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியில் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஒருவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.