ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்! விறுவிறுப்பாக நடைபெறும் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

சட்டப்பேரவை தேர்தலின் 3-வது மட்டும் கடைசி கட்ட வாக்குப்பதிவு தற்போது ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற்று வருகிறது.

Jammu Kashmir

ஜம்மு-காஷ்மீர் : கடந்த மாதம் செப்-18 தேதி 24 தொகுதிகளுக்கு முதற் கட்டமாகவும், அதைத் தொடர்ந்து செப்-26ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.  மேலும், 9 மணி நிலவரப்படி 11.06 % சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, ‘அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’, என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து அந்த பதிவில், “ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள். பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்”, என மோடி பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்