டிஜிபி கொலை.! இன்டர்நெட் முடக்கம்.! அமித்ஷாவின் 2 நாள் பயணம்.! காஷ்மீரில் அடுத்தடுத்த நகர்வுகள்…
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டார். 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார். பாதுகாப்பு கருதி பல்வேறு இடஙக்ளில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பியாக பணியாற்றி வந்த 57 வயதான ஹேமந்த் குமார் லோஹியா நேற்று அவரது வீட்டில் கழுத்து அறுபட்டு உயிரிழந்தார்.
ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா எனும் பகுதியில் தங்கி இருந்த ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டு இருந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக வீட்டு வேலையாளான இளைஞன் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மற்றும் நாளை என 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக தற்போது ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கடந்த 7 மணிநேரத்திற்கும் மேலாக இன்டர்நெட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாலை 7 மணி வரையில் இன்டர்நெட் முடக்கம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது .