ஜம்முவின் சுஞ்சுவான் மற்றொரு ராணுவ முகாமை தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் சுஞ்சுவான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து மேலும் ஒரு வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுஞ்சுவான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜம்முவின் ராய்ப்பூர் டோமனா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி இன்று காலை முறியடிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் விழிப்புடன் இருந்து பதிலடி கொடுத்ததால், பைக்கில் வந்த இரு தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். அவர்களை வேட்டையாட, ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஸ்ரீநகரின் கரண் நகர் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாமை நேற்று அதிகாலை தாக்க முயன்று தப்பிஓடிய தீவிரவாதிகளை வேட்டையாட அங்கு இரண்டாவது நாளாக இன்றும் தேடுதல் நடைபெற்று வருகிறது. தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரண் நகர் பகுதியில் நேற்றைய தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…